Kerala Recipe: கேரளா ஸ்டைல் மணக்கும் பூண்டு தொக்கு – சுவையாக செய்வது எப்படி?

0
287
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைல் மணக்கும் பூண்டு தொக்கு – சுவையாக செய்வது எப்படி?

சுவையான கேரளா பூண்டு தொக்கு செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு – 1 கப்
2)வர மிளகாய் – 5
3)கடுகு – 1 தேக்கரண்டி
4)வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
6)மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
7)புளிக்கரைசல் – 3 தேக்கரண்டி
8)தேங்காய் எண்ணெய் – 5 தேக்கரண்டி
9) உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கப் அளவு பூண்டை தோல் நீக்கி தண்ணீரில் போட்டு சசுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழ அளவு புளியை போட்டு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 5 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதில் கடுகு மற்றும் வெந்தயத்தை போட்டு பொரிய விடவும்.

பிறகு அதில் சுத்தம் செய்து வைத்துள்ள பூண்டை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.இதற்கிடையில் ஒரு கிண்ணத்தில் வரமிளகாய் போட்டு தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

இந்த மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை வதங்கி கொண்டிருக்கும் பூண்டில் போட்டு வதக்கி எடுக்கவும்.

அதன் பின்னர் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள் மற்றும் புளி கரைசலை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பூண்டு கலவை நன்கு சுண்டி வந்ததும் கடாயை இறக்கினால் சுவையான பூண்டு தொக்கு ரெடி.

Previous articleவெயில் காலத்தில் இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்!!
Next articleதூங்கும் முன் தொப்புளில் சில சொட்டு விளக்கெண்ணெய் வைத்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?