கோடை காலத்தில் அக்குளில் இருந்து வீசும் அதிகப்படியான வியர்வை துற்நாற்றத்திற்கு எளிய தீர்வு இதோ!!
வெயில் காலம் தொடங்கி விட்டால் அக்குள் பகுதியில் அதிகளவு வியர்வை சுரக்கும்.இதனால் அப்பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
உடலில் அதிகளவு வியர்வை நாற்றம் வீசினால் பொதுவெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.நமக்கு பிடித்தவர்கள் கூட நம் அருகில் வர யோசிப்பார்கள்.எனவே அக்குள் பகுதியில் வீசும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)பன்னீர் ரோஜா
2)விரலி மஞ்சள்
3)வேப்பிலை
4)கடலை பருப்பு
செய்முறை:-
ஒரு கைப்பிடி அளவு பன்னீர் ரோஜா எடுத்து அதன் இதழ்களை தனியாக பிரித்து வெயிலில் காய வைக்கவும்.
அதேபோல் ஒரு கப் வேப்பிலையை வெயிலில் காயவைக்கவும்.இவை இரண்டும் நன்கு காய்ந்த பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு துண்டு விரலி மஞ்சளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 கப் கடலை பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆற விட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
அரைத்த பன்னீர் ரோஜா,வேப்பிலை,மஞ்சள் மற்றும் கடலை பருப்பு பொடியை நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அளவு அரைத்த பொடி சேர்த்து 2 1/2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்து அக்குள் பகுதியில் தடவி மசாஜ் செய்யவும்.
20 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு அக்குளை சுத்தம் செய்யவும்.இவ்வாறு காலை,மாலை இருவேளையும் செய்து வந்தால் அக்குளில் வீசும் வியர்வை துர்நற்றம் கட்டுப்படும்.