பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்….. குழந்தையாக நினைத்து கொடுத்ததாக விளக்கம்..!
நாடு முழுவதும் தேர்தல் காரணமாக அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வேட்பாளர் ஒருவரு பொதுவெளியில் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் வடக்கு எம்பி ககென் முர்மு பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், ககென் முர்மு அவரது தொகுதியில் திவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை திரிணாமுல் கட்சியினர் சோசியல் மீடியாக்களில் பரப்பி பாஜகவினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல பாஜகவில் பெண்களுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு பஞ்சமே இல்லை. ஓட்டுக்கேட்டு வரும்போதே இப்படி என்றால், அவர்கள் ஜெயித்து விட்டால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள் என கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து ககென் முர்மு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “அந்த பெண் என் உறவினர். அவர் எனக்கு குழந்தை மாதிரி. குழந்தையை முத்தமிடுவது தவறல்ல. பாஜக அனைத்து பெண்களையும் மதிக்கிறது. என்னை காலி செய்ய வேண்டுமென சிலர் திட்டமிட்டு நடத்தும் சதி தான் இது” என கூறியுள்ளார்.