தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை… கிராமுக்கு 7 ஆயிரத்தை நெருங்கியது?

0
112
#image_title

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை… கிராமுக்கு 7 ஆயிரத்தை நெருங்கியது?

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்த வண்ணம் மட்டுமே உள்ளது. பொதுவாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக ஏற்றம் மட்டுமே உள்ளதே தவிர விலையில் இறக்கம் இருப்பதாக தெரியவில்லை.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்கும் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து தான் காணப்படுகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்திற்கு விற்பனையான தங்கம் மார்ச் மாதம் 51 ஆயிரத்திற்கும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை 52 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் ரூ.280 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6705-க்கும், ஒரு பவுன் ரூ.53,640-க்கும் விற்பனையாகி வருகிறது. இதுதவிர வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.89-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 7 ஆயித்தை நெருங்கி கொண்டிருப்பதால் சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர்.