நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளியை 1/2 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் கசாயம்! இதை எவ்வாறு தயார் செய்வது?

Photo of author

By Divya

நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளியை 1/2 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் கசாயம்! இதை எவ்வாறு தயார் செய்வது?

காலநிலை மாற்றத்தால் சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பு வீட்டில் ஒருவருக்கு வந்தாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும்.அதிலும் சளியால் சுவாசிப்பதில் பிரச்சனை,நெஞ்சு பகுதியில் வலி அனத்தம் ஆகியவை ஏற்படும்.

இந்த பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மூலிகை கசாயம் செய்து குடியுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை
2)வர கொத்தமல்லி
3)துளசி
4)வெற்றிலை
5)மிளகு
6)சீரகம்
7)இஞ்சி

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் ஒரு வெற்றிலையை தண்ணீரில் போட்டு அலசிக் கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு துண்டு பட்டை,ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி,4 மிளகு,1/4 சீரகம் சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இடித்த துளசி மற்றும் வெற்றிலையை போட்டு கலந்து விடவும்.அதன் பின்னர் இடித்த பொடி மற்றும் இடித்த இஞ்சி சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

கொதிக்க வைத்த கசாயத்தை ஒரு தட்டு போட்டு 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூட்டில் குடித்தால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி 1/2 மணி நேரத்தில் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்.