கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? விலையோ மலிவு ஆனால் பலன் அதிகம்!!

0
210
obi-rice-is-enoch-in-a-spoon-you-can-now-prepare-your-wum-pass-whitening-cream-at-homo
obi-rice-is-enoch-in-a-spoon-you-can-now-prepare-your-wum-pass-whitening-cream-at-homo

கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? விலையோ மலிவு ஆனால் பலன் அதிகம்!!

நம் தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.இந்த பனை மரத்தில் இருந்து பனை ஓலை,தெழுவு,நுங்கு,பனங்கிழங்கு,பனம் பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது.பொதுவாக பனைமரம் கிராம பகுதியில் தான் அதிகம் காணப்படுகிறது.பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களில் நுங்கு அதிக குளிர்ச்சி நிறைந்தவை.

இந்த நுங்கில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர்ச்சி நிறைந்த இயற்கை பொருளான நுங்கை சாப்பிட்டு உடல் வெப்பமாவதை தடுக்கலாம்.

நுங்கு சாப்பிடுவதால் அம்மை நோய் வராமல் இருக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் நுங்கு சாப்பிட்டு வந்தால் அதற்குஉரிய தீர்வு கிடைக்கும்.

இரத்த சோகை உள்ளவர்களுக்கு நுங்கு ஒரு அருமருந்தாகும்.வியர்க்குரு கொப்பளத்தின் மீது நுங்கை பூசினால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

அல்சர்,குடல் புண் பாதிப்பு இருக்கும் நபர்கள் நுங்கு சாப்பிடுவது நல்லது.நுங்கை முகத்தில் பூசி வாஷ் செய்து வந்தால் சருமம் மிருதுவாக இருக்கும்.

கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும்.உடலில் அதிகளவு பித்தம் இருக்கும் நபர்களுக்கு நுங்கு சிறந்த தீர்வாக இருக்கும்.