வரி செலுத்தாமல் ஜிஎஸ்டி குறித்து வாய்கிழிய பேசிய சரத்குமார்..ஆதாரத்தை காட்டி ஆஃப் செய்த திமுக..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “ஹோட்டல் முதல் டூவீலர் பழுது பார்ப்பது வரை அனைத்திற்கும் ஜிஎஸ்டியா? விட்டால் இனி செல்ஃபி எடுத்தால் கூட ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று கூவார்கள் போல” என விமர்சனம் செய்திருந்தார்.
உடனே பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சரத்குமார் முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்குமாறு, “3 முறை முதல்வர் 2 முறை பிரதமராக உள்ள அவருக்கும் உங்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. உங்களுக்கு கீழ்தரமான அரசியல் தான் பேச தெரியும்.
நான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வார காலம் அவகாசம் தருகிறேன். ஜிஎஸ்டி குறித்து நன்கு படித்து விட்டு என்னுடன் அவர் நேருக்கு ஒரு டிவி சேனலில் விவாதத்திற்கு வரட்டும். நான் அவருடன் விவாதிக்க தயார். அவர் தயாரா?” என முதல்வருக்கு சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் திமுக ஆதரவாளர்கள் சிலர் விருதுநகர் தொகுதியில் வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ள ராதிகா சரத்குமார் அவரின் பிரமாணப்பத்திரத்தில் பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். அதன்படி ராதிகா சுமார் 6.54 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி பாக்கி வைத்துள்ளார்.
அவரின் கணவரும் நடிகருமான சரத்குமார் 8.48 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி பாக்கி வைத்துள்ளார். ஆக மொத்தம் இருவரும் சேர்ந்து 15 கோடி ரூபாய் வரி பணத்தை அரசுக்கு செலுத்த வேண்டுமென ராதிகா சரத்குமார் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர்.