விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்த சம்பவம்..தக் லைஃப் படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..!!

0
234
The incident where the separated actors reunited..The action changes that will happen in Thug Life..!!
The incident where the separated actors reunited..The action changes that will happen in Thug Life..!!

விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்த சம்பவம்..தக் லைஃப் படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..!!

மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில், மக்களவை தேர்தல் தொடங்கி விட்டதால் நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் பிசியாகி விட்டார். எனவே இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பாதிக்கப்பட்டனர். 

அந்த வகையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் தக் லைஃப் படத்தில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி, நிவின்பாலி போன்ற நடிகர்களில் யாராவது நடிப்பார்கள் என்று தகவல் வெளியானது. 

ஆனால் தற்போது புது டிவிஸ்ட்டாக படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அட ஆமாங்க துல்கர் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் மீண்டும் தக் லைஃப் படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார்களாம். இவர்கள் தவிர சிம்புவும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். 

இதற்காக மணிரத்னம் சிம்புவிற்கு ஸ்கிரீன் டெஸ்ட் கூட எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 20ஆம் தேதி முதல் டெல்லியில் தொடங்கி செனை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது.