சிறுநீரகத்தில் உள்ள பெரிய கற்களையும் அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும் பாட்டி மருத்துவம்!!

0
238
Grandmother's medicine that dissolves large stones in the kidney as an assault!!
Grandmother's medicine that dissolves large stones in the kidney as an assault!!

சிறுநீரகத்தில் உள்ள பெரிய கற்களையும் அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும் பாட்டி மருத்துவம்!!

மனித உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம்.உடலில் உருவாகும் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியை சிறுநீரகம் செய்கிறது.

ஆனால் இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.தற்பொழுது சிறுநீரக கல் பாதிப்பை பலர் சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல் உருவாக காரணம் நாம் செய்யும் தவறுகள் தான்.

அதாவது உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்தாமை,சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது,தைராய்டு,சிறுநீரக தொற்று போன்றவை சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு காரணம் ஆகும்.

உணவில் அதிகளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சிறுநீரக கல் அறிகுறிகள்:-

1)ஆண்குறி வீக்கம்
2)சிறுநீர் பை வீக்கம்
3)சூடான சிறுநீர் வெளியேற்றம்
4)அதிக உடல் வலி
5)பசியின்மை
6)சிறுநீரில் துர்நாற்றம் வீசுதல்
7)சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் எளிய வழிகள்:

*மூக்கிரட்டை கீரை

ஒரு கைப்பிடி அளவு மூக்கிரட்டை கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

*நெருஞ்சில் + சுக்கு

ஒரு கப் அளவு நீரில் ஒரு தேக்கரண்டி நெருஞ்சில் முள் மற்றும் ஒரு துண்டு இடித்த சுக்கு சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.

Previous articleவெயில் காலத்தில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் வறட்சியை சரி செய்ய உதவும் கை வைத்தியம்!!
Next articleகாலையில் நிம்மதியாக மலத்தை வெளியேற்ற இதை பழம் ஒன்று சாப்பிடுங்கள்! ரிசல்ட்ட பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!