சிறுநீர் கடுப்பு? இதை சரி செய்ய உதவும் பெஸ்ட் ஹோம்மேட் ட்ரீட்மெண்ட்!!
இன்று பெரும்பாலனோர் சிறுநீர் கடுப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இவை சம்மரில் ஏற்படும் உடல் உபாதைகளில் ஒன்று.உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது உடல் நீரின்றி வறட்சி நிலைக்கு தள்ளப்படுகிறது.இதை கவனிக்கா விட்டால் அவை நீர்கடுப்பாக மாறி தீராத தொல்லை கொடுக்கும்.
உடலில் நீர் வற்றி போனால் அவை சிறுநீரகத்தில் தொற்று,சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.இந்த சிறுநீர் கடுப்பு கோடை காலத்தில் தான் அதிகளவு ஏற்படுகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயமும் இருக்கிறது.இந்த சிறுநீர் கடுப்பில் இருந்து விரைவில் குணமடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு மருத்துவத்தை பின்பற்றி வரவும்.
புளிக்கரைசல் சிறுநீர் கடுப்பை குணமாக்கும் சிறந்த மருந்து.தினமும் ஒரு துண்டு புளியை நீரில் கரைத்து குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.
உளுந்து பருப்பு ஊற வைத்த நீரை அருந்தி வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.சீரகம் ஊறவைத்த நீரை குடித்து வருவதன் மூலம் சிறுநீர் கடுப்பை குணமாக்கி கொள்ளலாம்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீர் கடுப்பு நீங்கும்.
உடலுக்கு தேவையான நீர் அருந்துவது சிறுநீரை அடிக்கி வைக்காமல் கழிப்பது போன்ற பழக்கத்தை தொடர்ந்து வந்தால் சிறுநீர் கடுப்பு பிரச்சனையில் இருந்து விரைவில் தீர்வு கிடைக்கும்.பார்லி அரிசி ஊறவைத்த நீரை அருந்தி வந்தால் சிறுநீர் கடுப்பில் இருந்து எளிதில் மீண்டு விட முடியும்.