Chennai: முன்னாள் டிஐஜி தொடர்புடைய விடுதியில் பாலியல் தொழில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்.
பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் சென்னை விடுதி ஒன்றில் சோதனை செய்து இருக்கிறார்கள். அந்த விடுதியில் வெளிநாட்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது போலீசார் சோதனை செய்த விடுதி கோயம்பேடு மணமகள் நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஆகும். இந்த விடுதி ஓய்வு பெற்ற டிஐஜி ராமச்சந்திரன் மகன் விக்ரம் என்பவரது ஆகும். இவர் 14 ஆண்டுகளுக்கு முன் அவரது நண்பர் அருண் உடன் தொடர்புடைய நிர்மலா என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணிடம் மாதம் 35000 வாடகைக்கு வழங்கி இருக்கிறார்.
போலீசாரிடம் சிக்கிய 9 பேரில் நன்கு கென்ய நாட்டு பெண்கள் மற்றும் 4 டான்சானியா நாட்டு மேலும் ஒரு நைஜீரிய நாட்டு பெண்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இது மட்டுமல்லாது அந்த விடுதியில் இருந்து கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் 23 செல்போன், கார்,இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விடுதியை வாடகைக்கு எடுத்த நிர்மாலா என்ற அந்த பெண் வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி இருக்கிறாரா என்றும் வெளிநாட்டவர்கள் போதை பொருள் கடத்த போலியான பாஸ்போர்ட் பயன்படுத்தி இருக்கிறார்கள் என என்ற கோணத்தில் விசாரணை போலீசார் தரப்பில் நடத்தப்பட்டு வருகிறது.