கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்! பிரேசில் அதிபர் அறிவிப்பு

0
184

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கடந்த 15 ஆம் தேதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார்.

அதிபர் போல்சனேரோவுக்கு 21-ம் தேதி 3-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார்.  4வது சோதனையில் கொரோனாவில் குணமடைந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Previous articleநாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்
Next articleதேசிய அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த மாணவி! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here