தேசிய அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த மாணவி! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

0
92
Kanika
Kanika

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரின் மகளான மாணவி கனிகா சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்பெற்று தேசிய அளவில் அவர் சார்ந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி “மன் கீ பாத்” நிகழ்ச்சியின் போது தொலைபேசி வாயிலாக மாணவியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி கனிகா கூறியதாவது, “பிரதமர் அலுவலகத்திலிருந்து எங்கள் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அலுவலக அதிகாரிகள் சிறிது நேரத்தில் பிரதமர் மோடி உங்களிடம் பேசுவார் என தெரிவித்தனர்.ஆனால் இதற்கு முன் இது குறித்து நாங்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் பிரதமருடன் பேச நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன்.

இதனைதொடர்ந்து தொலைபேசியில் என்னிடம் பேசிய பிரதமர் மோடி சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக வாழ்த்துக்களை தெரிவித்தார்.வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு தேர்வுக்கு நன்றாக தயார் செய்திருக்கிறாய்,எவ்வாறு தேர்வு தயார் செய்தாய். இந்த மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தாயா என்று என்னிடம் பிரதமர் மோடி உரையாடினார்.பிரதமர் மோடியின் இந்த கேள்விகளுக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் பதில் அளித்தேன்.

இதனையடுத்து மேலே என்ன படிக்க விரும்புகிறாய் என்று என்னிடம்  பிரதமர் கேட்டார், இதற்கு நான் டாக்டராக விரும்புகிறேன் என்று மகிழ்ச்சியோடு என்னுடைய எதிர்கால திட்டத்தை பகிர்ந்து கொண்டேன்.மேலும் இதுவரை நாமக்கல் என்றால் ஆஞ்சிநேயர் கோவில் தான் நினைவுக்கு வரும் ஆனால் இனிமேல் நாமக்கல் என்றால் உன்னுடைய நினைவும் வரும் என்று பெருமிதத்தோடு கூறினார்” என மாணவி கனிகா கூறினார்

மேலும் கனிகாவின் சகோதரியான ஷிவானியும் மருத்துவம் படித்து வருவதை பிரதமர் பாராட்டினார். இவ்வாறு ஏழை குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்றும் வாழ்த்தினார்.

பிரதமரின் இச்செயலானது மக்களின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துவதாக மாறியுள்ளது.

author avatar
Kowsalya