கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு

0
191
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் வீரியம் அதிகரித்து வருகிறது. இதனால் இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.  வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன.  இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது. தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு செய்தனர்.
இதில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையை எட்டியுள்ள போதிலும், இது பாதுகாப்பானதா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி போன்ற சின்னச்சின்ன பக்க விளைவுகள் இருந்தன. அதேநேரம் இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த பரிசோதனை வெற்றி பெற்றால் வர்த்தக ரீதியில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மாடர்னா நிறுவனம் தொடங்கும்.
Previous articleசெமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!
Next articleசட்டமன்ற தேர்தலுக்காக வளைக்க பார்க்கும் திமுக! வளைந்து கொடுக்குமா பாமக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here