கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டதால் இந்த வாய்பினை சரியாக பயன்படுத்திய இந்திய இந்திய கிரிக்கெட் வாரியம் செப்டம்பர்-நவம்பர் மாதத்தில் ஐபிஎல் திருவிழாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக விளையாட்டிலிருந்து விலகி இருந்தபின் மீண்டும், செப்டம்பர் 19 முதல் துவங்கவுள்ள ஐபிஎல் 2020 உடன் இணைய உள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கு பின் தொடர்சியாக போட்டிகள் உள்ளதால் இந்திய வீரர்கள் அவர்களின் குடும்பங்களிலிருந்து 150 நாட்களுக்கு மேல் பிரிந்திருக்க கூடம். வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்கு முன் அகமதாபாத்தின் மொட்டெரா ஸ்டேடியத்தில் பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் ஐபிஎல் தொடர் 51 நாட்கள் நடக்க இருந்த நிலையில் இந்த ஆண்டு 53 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது என்று ஆளும் கவுன்சில் தலைவர் பிரிஜேஷ் படேல் சமீபத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.