சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது
பொதுவாகப் பெண்களுக்கும் சரி ஆண்களும் சரி 40 வயதை கடந்தாலே இடுப்பு வலி ,கால் வலி, மூட்டு வலி என பல வியாதிகள் வந்து விடுகிறது. அனைத்து எலும்புகளும் சுண்ணாம்புச்சத்தாள் இணைக்கப்பட்டுள்ளன.அப்படி உங்களது சுண்ணாம்புச் சத்து உடலில் குறையும்போது ஆங்காங்கே மூட்டுகளில் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த வலிகளுக்கு நிவாரணியாக ஒன்றை தேட வேண்டும் என்றால் அது சுண்ணாம்புச் சத்துள்ள பொருட்களை உண்பது தான்..
பொதுவாக பெண்களுக்கு 40 வயதுகளை கடந்தால் ஆங்காங்கே வலிகள் ஏற்படும்.தமக்கு சுண்ணாம்புச் சத்து குறைவாக உள்ளது என நினைத்துக் கொண்டு அவர்களே மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் கடைகளில் சென்று கால்சியம் மாத்திரைகளை வாங்கி உண்பார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதலான ஒன்று.
இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் சிறியவர்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. இதனால் ஆரோக்கியமான இயற்கை முறையை எப்படி பயன்படுத்தலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
வெந்தயம் – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
முதலில் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் வெந்தயத்தில் மிகுந்த அளவு மெக்னீசியம், கால்சியம் உள்ளது. சீரகம் அரை டீஸ்பூன் எடுத்து கொள்ளவும், மிளகு கால் டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். மூன்றையும் இலேசாக வறுத்து கொள்ளவும்.
நன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். வெயிலில் கூட காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.இது மிகவும் நல்லது.
இப்பொழுது நாம் தயாரித்து வைத்திருக்கும் இந்த பொடியை மிதமான இளஞ்சூட்டில் இருக்கும் தண்ணீரில் கலந்து குடித்து வர இடுப்பு வலி கை கால் வலி மூட்டு வலி என இருந்த இடம் தெரியாமல் பறந்து போகும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால் இதை காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு எடுத்து கொள்ள வேண்டும். இடுப்பு வலி, கழுத்து வலி ,கை, கால் முழங்கால் வலி என அனைத்து சகல வியாதிகளும் ஓடிப்போய்விடும்.