உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மருந்து கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகும். அங்கு மட்டும் 97 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.