ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பணியை நிலை நிறுத்துவதில் தோல்வியுற்றது

0
108
அமெரிக்கா உள்பட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் 2015-ம் ஆண்டில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் மீதான ஆயுத தடை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் என ஐ.நா. தெரிவித்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2018 – லே அமெரிக்கா விலகியது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.  ஈரான் மீதான ஆயுத தடையை ஐ.நா. காலவரையின்றி தடை போட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இந்த தடையை ஐ.நா. வின் உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷியா கடுமையாக எதிர்த்தது.
இந்த நிலையில் காணொலி காட்சி மூலமாக பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய இரு நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் வாக்களிக்காத காரணத்தினால் போதிய அதரவு இல்லை என்று அமெரிக்காவின்  தீர்மானத்தை ஐ.நா. நிராகரித்தது. இதுகுறித்து வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பேசும்போது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான  பொறுப்பில் இருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பணியை நிலை நிறுத்துவதில் தோல்வியுற்றது என்று கூறினார்.
Previous articleகேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் நடை இன்று திறப்பு!! பக்தர்கள் தரிசனத்திற்கு தடை..!
Next articleகாலமானார் புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டர்!