நீண்ட ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு பக்கபலமாக அமெரிக்கா உள்ளது. எனினும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கடைசியில் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே பிப்ரவரி மாதத்தில் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சாளர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி சல்மே கலீல்சாத் பேசும்போது பாவ்ஷியா கூபியை குறிவைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம். இது ஆப்கானிஸ்தானின் அமைதி நடவடிக்கையை தாமதப்படுத்தவும் சீர்குலைக்க முயற்சிப்பவர்களின் கோழைத்தனமான செயல் என்று அவர் கூறினார்.