மழையால் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஆட்டம்

0
202

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது ஆட்டத்தில் மூன்று நாட்கள் முடிந்த நிலையில் 86 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது பெரும்பாலான நேரங்களில் மழையே வந்ததால் ஆட்டம் சரியாக நடக்கவில்லை அதிலும் குறிப்பாக 3வது நாளில்  மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை நான்காவது நாளான நேற்று 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில்  இங்கிலாந்து அணி தனது இன்னிங்சை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே சாகின் அப்ரிடி பந்தில் ரன் எதும் எடுக்காமல்  கேட்ச் ஆனார் ராரி பர்ன்ஸ் 7 ரன்களுக்கு 1 விக்கெட் இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கீட்டதால் ஆட்டம் நடக்காமல் போனது.

Previous articleவிளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும்
Next article+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here