வைரஸை கட்டுப்படுத்த புதிய வகை எதிர்ப்புச்சக்தியா?

0
126

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு மந்தை என்ற எதிர்ப்பு சக்தி பற்றி பேசி வருகின்றனர். அந்த மந்தை எதிர்ப்புச்சக்தி பற்றி விஞ்ஞானிகள் கூறுவது ஒரு வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மக்களில் 70 சதவீதம் பேர் எதிர்ப்புச்சக்தி பெறுவதே ஆகும். ஆனால் ஒருசில வல்லுனர்கள் இந்த எதிர்ப்பு  சக்தியை 50 சதவீதம் பெற்றாலே பாதுகாப்பானது என கூறுகின்றனர்.  இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவின் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் பேசும்போது இந்த எதிர்ப்புசக்தியை உலக மக்கள் அனைவரும் பெறுவது சாத்தியமற்றது. இது எந்த வகையிலும் தீர்வை தராது. இதை மட்டுமே மக்கள் நம்பி இருக்க கூடாது. மூத்த ஆலோசகர் டாக்டர் புரூஸ் அய்ல்வர்ட் பேசும்போது பெரும்பாலானோர் எதிர்ப்புச்சக்தியை பெறுவதற்கு பயனுள்ள தடுப்பூசி தேவை, அது 50 சதவீத மக்களையாவது சென்று அடைவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

 

 

 

 

Previous articleபிரேசிலில் இவ்வளவு பலி எண்ணிக்கையா?
Next articleஇன்று (19.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?