சற்றுமுன் தொடங்கிய இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டி

0
188

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி பெரும்பாலான நேரங்களில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி சற்றுமுன் தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 25 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

Previous articleஇப்படிப்பட்ட மனிதரே அன்பு காட்டுகிறாரே?
Next articleபெங்களுரு அணியின் கேப்டனாக கோலி தொடருவாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here