அமெரிக்காவில் இப்படிப்பட்ட மருந்தா?

0
141

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித இனத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விமான சேவை உட்பட பல சேவைகள் பாதித்துள்ளது. உலகில் வேற எந்த நாடும் பாதிக்கப்படாத அளவில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அங்குதான் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை அமெரிக்க மருந்து நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனமும் அனுமதி அளித்துள்ளதால் களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த களிம்பிற்கு ‘டி3எக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதை 30 வினாடிகளுக்கு மூக்கில் தடவிக்கொண்ட  பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை. மேலும் இந்த மருந்தை வாங்குவதற்கு டாக்டர் சீட்டு தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு மூக்கு துவாரங்கள் மீது தடவிக்கொண்டால் அது வைரஸ் நுழைவதைத் தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Previous articleமுதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா..? இதோ உங்களுக்கான எளிய தீர்வுகள்..!!
Next articleபாலிவுட் நடிகர் சல்மான் கான்க்கு கொலை முயற்சி!! 22 வருடம் கழித்தும் தீராத  பழி உணர்வு??