நடிகர் சூர்யா நிராகரித்த காதல் படம் தனுஷின் நடிப்பில் வெற்றி பெற்றது!

0
128

சினிமாவில் நாம் நினைத்தபடி எதுவும் நடக்காது. முதலில் ஒன்றாக இருக்கும் விஷயம் அப்படியே மாறுபட்டு இருக்கும். குறிப்பிட்ட கதையில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் கதை சொல்ல போனால் அவர் நிராகரிப்பார். அதே கதையை வேறு ஒரு நடிகர் நடித்து அதனை வெற்றிப்படமாக கொடுப்பார்.

இதில் நடிகர் அஜித்,விஜய் மற்றும் அல்லாது கமல்,ரஜினி அதோடு அக்காலத்தில் இருந்தே எம்ஜிஆர்,சிவாஜி போன்றோருக்கும் நடந்திருக்கிறது.அவ்வகையில் நடிகர் அஜித் நிராகரித்த சில படங்களில் சூர்யா நடித்த அதனை வெற்றி படமாக கொடுத்துள்ளார். அதுபோல் நடிகர் சூர்யாவும் ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தை நிராகரித்துள்ளார். அது தனுஷ் நடிப்பில் வெளியான “திருடா திருடி” வெற்றிப்படம் ஆகும்.

‘துள்ளுவதோ இளமையில்’ அறிமுகமான நடிகர் தனுஷ் பிறகு அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை பெற்று தந்தது. ஆனால் ‘திருடா திருடி’ படமே நடிகர் தனுஷை கமர்ஷியல் நடிகராக எடுத்துக் காட்டியது. சுப்ரமணிய சிவா இயக்கத்தில் இப்படம் 2003 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாயாசிங் நடித்திருந்தார். மேலும் மாணிக்க விநாயகம்,கருணாஸ்,டெல்லி கணேஷ் போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இந்த படம் மட்டுமல்லாது அப்படத்தில் வந்த மன்மதராசா எனும் பாடலும் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்தது. வண்டார்குழலி உள்ளிட்ட பாடல்களும் அப்படத்தில் இடம் பெற்று வெற்றி பெற்றது.

இப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படத்தில் உள்ள பாடல் காட்சிகளும் அதில் வரும் நகைச்சுவைகளும் இன்றளவும் பேசப்படுகிறது. அதோடு இணையத்திலும் திடீரென்று வைரலாகி வருகிறது.இந்த படத்தை இயக்குனர் சுப்பிரமணிய சிவா முதலில் சூர்யாவிடம் தான் சொன்னார்.

அப்பொழுது நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் “நந்தா” திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்பொழுது அவர் “திருடா திருடி” கதையை ரசித்துக் கேட்டார்.மிகவும் ஜாலியான கதையாக உள்ளது என்றும் சொன்னார். பிறகு நான் தற்பொழுது தான் சீரியசான படங்களில் நடித்து வருகிறேன். எனவே இந்த கதைக்களம் எனக்கு சரியாக வருமா என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

பிறகுதான் இது தனுஷுக்கு சரியாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் கதையை சொன்னார். அவரும் ஒப்புக் கொண்டு நடித்து வெற்றிப்படமாக தந்தார் என்கிறார் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா.

Previous articleகொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம்! சற்றுமுன் வெளியான தகவல்
Next articleசென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்