சர்ச்சையில் சிக்கிய சூரி! ஹீரோவாகும் காமெடி நடிகர் சூரி! சூரியின் சாமர்த்திய செயல்!

0
129


தமிழ் சினிமாவின் காமெடி கலைஞர்களில் ஒருவராக நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சினிமாவை விட்டு சற்று தள்ளி இருக்கிறார். இந்நிலையில் வடிவேலு சாயலிலேயே சூரி இருப்பதாலும், மேலும் மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இல்லாத வெள்ளந்தியான பேச்சாலும் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சூரி பெற்றுள்ளார்.

வெள்ளந்தியான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களுக்கு புரோட்டா சூரியாக அறிமுகமான நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வரும் இவர் இப்பொழுது வெற்றிமாறன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இவ்வாறு வெளியான சந்தோஷமான செய்தியை தொடர்ந்து, லாக் டவுனில் நடிகர் விமலுடன் வெளியில் சுற்றிய சர்ச்சைகளிலும் சிக்கி வந்த சூரி இப்பொழுது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களை என இருவருக்கும் பாதகமில்லாத வகையில் செய்துள்ள செயல் ஒன்று அனைவரையும் உச்சு கொட்ட வைத்துள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரூ பேக் புகைப்படங்களை பகிர்ந்துள்ள சூரி, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி என இருவரும் திரையில் போட்டியாளர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் நடிகர் சூரிக்கு மனதளவில் இருவரும் நெருக்கமானவர்களே என்ற அடிப்படையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் ஒரு காட்சியின் புகைப்படத்தையும், விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடித்தபோது ஜீப்பில் நின்று கொண்டு எடுத்தவாறு புகைப்படம் ஒன்றையும் இந்த பதிவில் பதிவிட்டு இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் பாதகமில்லாமல் சாமர்த்தியமாக இந்த பதிவை சூரி பதிவிட்டு இருவரின் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார்.

காமெடி நடிகர்கள் அனைவரும் இப்பொழுது ஹீரோக்களாக கலக்கி வரும் நிலையில், நடிகர் சூரியும் இப்பொழுது ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தை அசுர இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதாகவும், அதற்காக தனது உடலை கடுமையான உடற்பயிற்சி மூலம் மெருகேற்றி வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வலம் வருகின்றன.

Previous articleதயாரிப்பாளரா?ரசிகர்களா?தளபதி விஜய்க்கு நெருக்கடி!
Next articleஜிஎஸ்டி விலக்கு 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிப்பு