செய்தியாளரை சரமாரியாகக் குத்தப்போவதாக கூறிய அதிபர்

Photo of author

By Parthipan K

செய்தியாளர் ஒருவரின் வாயில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ சரமாரியாகக் குத்தப்போவதாக எச்சரித்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்திற்குச் செல்லும் அதிபரிடம் செய்தியாளர்கள் கேள்விகேட்பது வழக்கம். நேற்று செய்தியாளர் ஒருவர் அதிபரின் மனைவி மிஷெல் போல்சோனாரோ ஊழலில் ஈடுபட்டாரா என்று கேள்வி எழுப்பினார். அதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்ட போல்சோனாரோ செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்கள் அதிபருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.