லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

Photo of author

By Parthipan K

லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

Parthipan K

லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 18,955 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.