பாகிஸ்தான் அணியை பற்றி இப்படி கூறினாரா முன்னாள் வீரர்?

0
176
இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான  மோன்டி பனேசர் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங்கை விட பவுலிங்கே சிறந்து விளங்கும் என்று கூறினார்.
ஆடுகளம் ஸ்விங் மற்றும் சீமிங் ஆகியவற்றிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், பேட்ஸ்மேன்களை தவறு செய்ய வைத்து விக்கெட்டுகளை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது பந்து வீச்சாளர்களுக்கு தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியவரிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பந்து வீச்சுதான்.
அவர்களுடைய பேட்டிங் அல்ல. பாகிஸ்தான் ஒரு அணுகுமுறையைக் கொண்டுள்ளது, இது அவர்கள் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக மாற விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான் மற்றும் முஷ்டாக் அகமது பயிற்சியில் இந்த புதிய அணி அவர்களுடைய அணுகுமுறையால் பாராட்டு பெற்றனர். பழைய அணிகளில் இதுபோன்று பார்க்க முடியாது’’ என்றார்.
Previous articleகட்டப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!
Next articleகொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here