கட்டப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

0
67

கட்டப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ஜாகிர் உசேன் தெருவுக்கு செல்லும் வழியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.இதனால் ஜாகிர் உசேன் பகுதி இஸ்லாமிய மக்களுக்கும் அருகிலுள்ள கனேசபுரத்தைச் சேர்ந்த இந்து மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.இது மட்டுமன்றி ஜாகிர் உசேன் பகுதியைச் சேர்ந்த ஷேக் முஹம்மத் என்பவருக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து அங்கும் கோயிலின் ஒரு பீடம் கட்டப்பட்டுள்ளது.இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் முற்றியது.இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பெயரில் வருவாய்துறை அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி,மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை ஒன்றினை அளித்தனர்.இதைத்தொடர்ந்து புறம்போக்கு நிலம்,மற்றும் இன்னொருவருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் பீடங்களை அகற்றும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து தூத்துக்குடி வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை ஒத்துழைப்புடன் விதிகளை மீறி கட்டப்பட்ட கோவில் மற்றும் கோவிலின் பீடம் ஆகியவற்றை அகற்றப்பட்டன.மேலும் இரு தரப்பினருக்கு இடையே எந்தவித மோதலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

author avatar
Pavithra