நோய்ப்பரவலை உலக சுகாதார நிறுவனம் முறையாகக் கையாளவில்லை

0
137

கொரோனா நோய்ப்பரவலை நிறுவனம் கையாண்ட விதம் பற்றிய குறைகூறலுக்கு அனைத்துலகச் சுகாதார நெருக்கடிநிலையை அறிவிப்பதன் தொடர்பிலான விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இவ்வாண்டு ஜனவரி 30ஆம் தேதி, கொரோனா கிருமிப்பரவல் தொடர்பில் பொதுச் சுகாதார அவசரநிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. அப்போது, சீனாவில் நூற்றுக்கும் குறைவான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்

சீனாவுக்கு வெளியே நோயால் எவரும் உயிர் இழக்கவில்லை. எனினும், நோய்ப்பரவலை நிறுவனம் முறையாகக் கையாளவில்லை எனும் குற்றச்சாட்டு நிலவுகிறது. கொரோனா கிருமித்தொற்று பற்றிய எச்சரிக்கையை நிறுவனம் தாமதமாக வெளியிட்டதாய், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உட்பட பல உலகத் தலைவர்கள் குறைகூறியுள்ளனர்.

Previous article#Breaking News: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்!!
Next articleகொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்