கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 வது இடத்தில் ரஷ்யா

0
120
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் மேலும் 4829 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.80 லட்சத்தை தாண்டியது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.
Previous articleகொரோனா சிகிச்சை முறையில் மக்களுக்கு அதிருப்தி!!
Next article12 வருட மும்பை வழக்கில் மூன்று பயங்கரவாதிகளுக்கு சிறைத்தண்டனை