ஐபிஎல் : சென்னை அணிக்கு சோதனைமேல் சோதனை

0
192

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அணி பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் என 13 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அணியில் மேலும் ஒரு வீரருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!
Next articleவிளையாட்டு துறையில் அதிகரிக்கும் பரிசுத்தொகை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here