விளையாட்டு துறையில் அதிகரிக்கும் பரிசுத்தொகை

0
195
மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளையொட்டி டெல்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண்  ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபொது, விளையாட்டு மற்றும் சாகச விருதுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.
அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகை ரூ .15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை மந்திரி தெரிவித்தார். தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.
Previous articleஐபிஎல் : சென்னை அணிக்கு சோதனைமேல் சோதனை
Next articleசீனாவில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here