கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா?

0
107
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 56 லட்சத்து 22 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 68 லட்சத்து 45 ஆயிரத்து 270 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 182 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Previous articleசூப்பர் போங்க ! WhatsApp-இன் புதிய அசத்தலான Update!
Next articleராணுவ டாங்கி மீது மோதிய கார் 4 பேர் பலி