உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 56 லட்சத்து 22 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் இன்று திறக்கப்படவுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளுக்கு வரவேண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தி திறந்து விடுவது பேரழிவிற்கான செயல் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.