நூலிலையில் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து அணி

0
132

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 1 – 0 என தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அதிரடியால் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இன்று மூன்றாவது இருபது ஓவர் போட்டி நேற்று இரவு இந்திய நேரப்படி 10.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹபிஸ் 52 பந்துகளுக்கு 86 ரன்கள் குவித்தார். பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்திலே ஜானி பேரிஸ்டோ டக் அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 61 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 1 – 1 என்று தொடர் சமநிலையில் முடிந்தது.

Previous articleஇஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Next articleஅனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!