தோல்வியே சந்திக்காத வீரர் தொடர்ச்சியாக இத்தனை வெற்றியா?

0
112

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) பந்தாடினார். இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக ருசித்த 24-வது வெற்றி இதுவாகும். ஜோகோவிச் அடுத்து கைல் எட்மன்டை (இங்கிலாந்து) சந்திக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒசாகா சக நாட்டவர் மிசாகி டோயை 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி 2 நிமிடங்கள் போராடி தோற்கடித்தார்.

Previous articleகரீபியன் லீக் : ஆன்ட்ரே ரஸ்ஸலின் அரைசதம் வீண்
Next articleநாங்கள் ஒன்றும் ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை – விராட் கோலி