நாங்கள் ஒன்றும் இங்கிலாந்தை பார்த்து பயப்படவில்லை

0
109

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் முடிந்துவிட்டது.

தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று 50 ஓவர் போட்டிகள் விளையாட உள்ளன. இதில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதும் முதல் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 க்கு தொடங்குகிறது. இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் பேசும்போது  நாங்கள்  இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்ததை நினைத்து விளையாட மாட்டோம் இந்த போட்டியில் புத்துணர்ச்சியாக செயல்படுவோம். எங்களுடைய தொடக்க பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும் கடைநிலை வீரர்கள் சேஸிங் செய்வார்கள் என்று கூறினார்.

Previous articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!
Next articleஐபிஎல் : அட்டவணை வெளியாகும் தேதி திடீர் மாற்றம்