இந்த இருநாடுகளுக்கும் உதவ தயாரா இருக்கிறேன் – டிரம்ப்

Photo of author

By Parthipan K

இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த டிரம்ப், இல்லை என்று நம்புகிறேன். ஆனால்,  ஆனால் அவர்கள் (சீனா) நிச்சயமாக அதற்கு போகிறார்கள். நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக செல்கிறார்கள்” என்றார். இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், “ இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.  சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். சீனா – இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.