இந்த வைரஸ் ஒன்றும் அவ்வளவு கொடியது அல்ல

0
76
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்று, மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நோய் எக்ஸ் மனித குலத்துக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது மிகப்பெரிய தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என 2018-ல் உலக சுகாதார அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று முதலில் பரவிய போதும், நோய் எக்ஸ் வந்துவிட்டதோ என்றுதான் சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் கொரோனா ஒரு உலக பேரிடர், ஆனால் நோய் எக்ஸ் அல்ல’ என்று கூறினார்.
author avatar
Parthipan K