மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதது மிகவும் நல்லது

0
109
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெற இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ரசிகர்கள் இல்லாதது இளம் வீரர்களுக்கான நெருக்கடியை சற்று குறைக்கும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சைமன் காடிச் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில், சில இளம் வீரர்கள் இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள்.
மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதது சத்தம் மற்றும் கவனச் சிதறல்கள் போன்றவற்றில் அவர்களுக்கான நெருக்கடியை சற்று குறைப்பதாக இருக்கும் என நினைக்கிறேன். சில அனுபவ வீரர்களுக்கு இது அதிக சவால்களை ஏற்படுத்தும். அவர்கள் ரசிகர்கள் ஆரவாரத்தை மிகப்பெரிய பலமாக கருதுவார்கள். எங்களுடைய அணி அதிகமாக உத்வேகத்துடன் சென்று, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்’’ என்றார்.
Previous articleஅமெரிக்காவை மிரட்டி வரும் கொரோனா
Next articleடோனியை பற்றி பேட் கம்மின்ஸ் இப்படி கூறினாரா?