சீனாவுக்கு ஆப்பு வைத்த டிரம்ப் நிர்வாகம்

0
113
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது.  இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ஷெங்டூ நகரில் செயல்பட்டுவந்த அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூடும்படி சீனா உத்தரவிட்டது. இதையடுத்து ஷெங்டூ தூதரகம் மூடப்பட்டது. இந்த விவகாரங்கள் இரு நாட்டிற்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சீன நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மேலும், 2018-19 ஆண்டு கணக்கீட்டின் படி 3 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழங்களில் ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்புகள் படிக்க விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.
Previous articleஇது கொரோனா பரிசோதனையா அல்லது பள்ளி தேர்வு முடிவா
Next articleதிடீர்னு சாமி மேல இவ்வளவு அக்கறையா? அண்டர் பல்டி அடித்த வனிதா!