இது கொரோனா பரிசோதனையா அல்லது பள்ளி தேர்வு முடிவா

0
184
இந்த வருடம் ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட  பின்னரே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர். இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் அய்யர் கொரோனா பரிசோதனை அரசுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
அறைக்குள் இருப்பது எளிதான காரியம் அல்ல. வெப்பம் அதிகமான இருந்தது.
ஆனால், ஓட்டல் அறையில் ஏ.சி. இருந்ததால், எல்லா நேரமும் அதை பயன்படுத்திக் கொண்டேன். இரண்டு செசன் பயிற்சிக்குப்பின் என்னுடைய ரிதம் மெதுவாக திரும்புகிறது. ஆனால், உறுதியாக திரும்பிவிடும். பேட்டிங்கின் தீவிரத்தை வலைப்பயிற்சியிலும், ஆட்டத்திலும் பார்க்க முடியும். பேட்ஸ்மேன்கள் பந்தை விளாசினர். வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை வெளிப்படுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களுடைய டிரிக்கை பெற்றனர். கிரிக்கெட் விளையாட ஓய்வு நேரம், நாங்கள் கிரிக்கெட்டை எப்படி விரும்புகிறோம் என்பதை உணர வைத்தது’’ என்றார்.
Previous articleஇனி ஈசியாக விவசாய மின் இணைப்பு பெறலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!!
Next articleசீனாவுக்கு ஆப்பு வைத்த டிரம்ப் நிர்வாகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here