கொரோனா என்ற வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அவர்கள் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விடுதிக்கு சம்பந்தபட்டவர்களான உள்ளிட்ட தரப்புகளுடன் அதன் தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒரே இடத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, உரிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி ஒரே விடுதியில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.