இந்திய விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய மத்திய அரசு :! ராகுல் காந்தி டுவிட் !!

0
138

கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.அதில் விவசாயிகளுக்காக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தனர்.

இதற்கு பஞ்சாப், ஹரியானா ,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள் ,இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த்ததோடு , விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதனால் இந்த மூன்று மசோதாக்களை மத்திய அரசு எளிதாக நிறைவேற்றியது.

பின்னர், மாநிலங்களவையில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவும், மற்ற இரு மசோதாவும் தனியாக மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

மேலும், இது தொடர்பாக 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று அரசிதழ் வெளியாகியது.

இதற்காக  விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் , கடைசி வரை முயற்சித்தும் சட்டம் அமலுக்கு வந்ததனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாய சட்டமாது விவசாயிகளுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளதாகவும், அவர்களின் குரல் பாராளுமன்றத்தில் வெளியும் நசுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

https://twitter.com/RahulGandhi/status/1310456937096466432?s=20

மேலும், இந்தியாவில் ஜனநாயகம் இறந்து விட்டதற்கான சான்று இங்கே நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

Previous articleஅக்டோபர் 1 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..! முதல்வர் அறிவிப்பு!!
Next articleதமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்