சமையலின் சுவையை கூட்டும் 6 ! சமையல் குறிப்புகள். இப்படி செஞ்சி பாருங்க!

0
200
Adding to the taste of cooking 6! cooking recipes. Look at Ginger like this!
Adding to the taste of cooking 6! cooking recipes. Look at Ginger like this!

சமையலின் சுவையை கூட்டும் 6 ! சமையல் குறிப்புகள். இப்படி செஞ்சி பாருங்க!

சாம்பார் வைக்கும் போது புளிப்பு அதிகமாக போய்விட்டால் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கலந்தால் புளிப்பு சுத்தமாக குறைந்து விடும்.

சாம்பார் வைத்து முடித்ததும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலந்தால் சாம்பார் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

தோசை மாவில் ஒரு கை அளவு கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து தோசை ஊற்றி திருப்பி போட்டு அதன் மேல் நெய் அல்லது வெண்ணெய் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

பைத்தம் பருப்பு மசியல்: பருப்பு  வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ண ஊற்றி தண்ணீர் குறைவாக  வேக வைத்தால்  பருப்பு ஒட்டாமல் வரும். வெந்ததும் பருப்பில் தண்ணீர் ஊற்றி கரைத்து விட்டால் பைத்தம்  பருப்பு மசியல் சுவையாக இருக்கும்.

தக்காளி பச்சடி அல்லது கிரை மசியல் செய்யும் போது கடுகுக்கு பதிலாக சீரகம் போட்டு தாளித்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

பாயாசம் செய்யும் போது சிறிது அளவு பாதம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் மிகவும் ருசியாக இருக்கும்.

Previous articleகீர்த்தி சுரேஷை மூக்கில் குத்திய பிரபல நடிகர்! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு!
Next articleஇபிஎஸ் – ஓபிஎஸுக்கு இடியாய் அமைந்த செய்தி! துடிதுடிக்கும் அதிமுக தொண்டர்கள்!