இபிஎஸ் – ஓபிஎஸுக்கு இடியாய் அமைந்த செய்தி! துடிதுடிக்கும் அதிமுக தொண்டர்கள்!

0
78
ADMK
ADMK

அதிமுக ராஜ்ய சபா எம்.பி. முகமது ஜான் தேர்தல் பிரசாரத்தின் போது மரணமடைந்த சம்பவம் கட்சி தொண்டர்களையும், அதிமுக தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது ஜான். 2016ம் ஆண்டு ராணிபேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் காந்தியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முடிவின் படி 2019ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார். அதேசமயத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியவர்.

ராணிப்பேட்டை மக்களிடையே முகம்மது ஜானுக்கு செல்வாக்கு அதிகம் என்பதால் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் அதிமுகவை வெற்றிச் செய்ய வேண்டுமென தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இன்றும் அதேபோல் வாலாஜாபேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உணவை முடித்துக்கொண்டு சிறிது நேர ஓய்விற்கு பிறகு காரில் மீண்டும் பரப்புரைக்கு காரில் கிளம்பிய போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள் அவரை அதே காரில் வேகமாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றன.

அங்கு அவருடைய உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், முகம்மது ஜான் உயிர் பிரிந்துவிட்டது என்ற துயரமான செய்தியை  தெரிவித்தனர். இந்த செய்தியைக் கேட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க மருத்துவமனையில் குவிய ஆரம்பித்தனர். முகம்மது ஜான் மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி ப

author avatar
CineDesk