கொரோனா உலக நாடு முழுவதும் பரவி எத்தனையோ லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் தப்பி இருந்தாலும், இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் கொரோனாவின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகின்றது.
கொரோனா வைரஸ் உற்பத்தி செய்து அதனை பரப்ப விட்டது சீனாவே என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எத்தனையோ முறை குற்றம் சாட்டியுள்ளார். அதனை உறுதி செய்யும் பொருட்டு கொரோனாவை உற்பத்தி செய்து பரப்ப விட்டது சீனா என்பதற்கான முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொரோனா ஒரு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உயிர் கொல்லி. இது சீனாவின் ராணுவ மையத்தில் தயாரிக்கப்பட்டது என நிபுணர் சீனாவின் தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் லு மெங் யான் சமீபத்தில் பகீர் தகவல் வெளியிட்டார். இந்த தகவலை மேற்கோள் காட்டிய ஆஸ்திரேலியா பத்திரிகைகள் வெளிவந்தன.
சீனாவுக்கு எதிராக திரட்டிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் உலக நாடுகளை மிகவும் கோபத்தை தூண்டி உள்ளது என்றே கூறலாம். அமெரிக்காவிடம் சிக்கிய ஆதாரங்கள் ஒட்டுமொத்த உலகையும் சீனாவின் பக்கம் திருப்பியுள்ளது..
உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் இன் தோற்றம் குறித்து சீனாவில் விசாரணை தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சீனாவில் கொரோனா வந்ததற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்ற ஆய்வகத்தில் பணிபுரியும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளது தெரியவந்துள்ளது என அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட அந்த மூன்று ஆராய்ச்சியாளர்களின் தொற்று ஏற்பட்ட நேரம் , ஆய்வு செய்வதற்கு வருகை தந்த நேரம், மருத்துவமனைகளின் வருகை பற்றிய விபரம், என பல்வேறு ஆதாரங்களை திரட்டி உள்ளதால் அந்த வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஒரு என்ற ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா பரவி இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என செய்தி வெளிவந்துள்ளது..
இந்த அறிக்கை சீனாவுக்கு எதிரான ஆதாரங்களை மேலும் வலுப்படுத்தி உலக சுகாதார மையம் விசாரணை நடத்துவதற்கு அடுத்த கட்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.