குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

0
126

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகியவை தொடர்பான பிரச்சனை என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும், பாஜக கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியுடன் இணைந்து வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்று முனைப்புடன் இருந்து படுதோல்வியை சந்தித்தது. அதிமுகவின் இந்த தோல்விக்கு தேமுதிக வெளியேற்றம், பாஜக கூட்டணி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு ஆகிய அனைத்துமே தான் முக்கிய காரணம் என கூறப்பட்டது.

மேலும், சிவி சண்முகம் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று வெளிப்படையாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டு வருகிறார். அதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகி வரும் நிலையில் சசிகலாவுடன் தொடர்பில் இருந்த பலரும் அதிமுகவில் நீக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் அனைத்து அலுவலகங்களிலும் இதனை போல தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக பாஜக கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், கட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும், அவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் குடும்ப தலைவிகளுக்கு 1000 வழங்கப்படவில்லை எனில் போராட்டம் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Previous articleமேகதாது அணை பிரச்சனைக்கு முடிவு?! விவசாயிகள் எதிர்பார்ப்பு!
Next articleதமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்