“என் சொத்து அழிந்து விடும் போல”-பெட்ரோல் விலையால் மக்கள் புலம்பல்!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?!

0
135

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பதால் மக்கள் வெளியில் வருவதற்கு பெட்ரோல் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி நடந்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. ஆனால், அதே நேரத்தில் டீசல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து உள்ளதால், பெட்ரோல் விலை ரூபாய் 101.92 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதேபோல, டீசல் விலை ஆனது 15 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலை ரூபாய் 94.24 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 102 ரூபாய் உயர்ந்து விட்டதை அடுத்துபொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதேபோல பெட்ரோல் விலை ஏறிக் கொண்டே இருந்தால் இன்னும் ஒரு சில நாட்களில் வண்டிகளை அனைவரும் விற்று சைக்கிள் வாங்கும் நிலை ஏற்படும் என்று மக்கள் புலம்புகின்றனர். மேலும் இதே போல உயர்ந்து கொண்டே இருந்தால் ரூபாய் 110 என்று உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறுகின்றனர். டீசல் விலை விரைவில் 100 தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, எப்பொழுதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் இருந்த காலத்தில், அனைவரும் இங்கிருந்து பக்கத்தில் சென்றால் கூட வண்டியை எடுத்துக் கொண்டு ஓடினர். ஆனால், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் காரணமாக அனைவரும் ”இனி வண்டிகளை வைத்திருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. வண்டிகளுக்கு டீசல் போட்டே என் சொத்து அழிந்து விடும் போலிருக்கிறது” என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும், நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடுத்தர மக்கள், வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் எப்பொழுதும் வண்டியை எடுத்துக் கொண்டு தான் அவர்களுடைய வேலைக்கு செல்வார்கள். ஆனால், இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக அவர்கள் வியாபாரத்தில் பெரும் கேடு வந்துள்ளது.

அவர்கள் பணம் செலுத்த இயலாத காரணத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை என்று புலம்புகின்றனர். இனியாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Previous articleதே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!
Next articleதமிழகத்தில் இன்று முதல் புதிய ஊரடங்கு!! அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்!!